வதந்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என தெரிவிப்பு

ஒக்டோபர் 16, 2019

இன்று காலை (ஒக்டோபர்,16) கம்பஹா மிரிஸ்வத்த, கெப்பெடிபொல மகாவித்தியாலயம் மற்றும்  முகத்துவாரம் மட்டக்குளி புனித மரியாள் தேவாலயம் ஆகியவற்றுக்கு அருகாமையில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக போலியான தகவல்கள் பரவிவருகின்றன.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பாதுகாப்பு படையினர் இரு இடங்களையும் சோதனையிட்டனர். எனினும் அவ்வாறான எந்தவொரு பொருட்களும் இல்லை என தெரிவித்துள்ளதுடன், இவ்வாறான வெடிகுண்டு புரளியை பரப்பி  மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றனர்.

மேலும், இவ்வாறு சந்தேகத்திற்கு இடமான நிலைமை ஏற்பட்டால்,மக்கள் மத்தியில் போலியான செய்திகள் பரவுவதை தவிர்க்கும் வகையில் கீழ்காணும் இராணுவ மற்றும் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.   

        இலங்கை இராணுவ அவசர தொலைபேசி இலக்கம்    -  011 405 5105/6
        இலங்கை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம்     -  011 242 1111

இது தொடர்பில் உங்கள் ஒத்துழைப்பு பெரிதும் வரவேற்கப்படுகிறது.