--> -->

6ஆவது ஆசிய பசிபிக் மாநாடு வெற்றிகரமாக நிறைவு

நவம்பர் 22, 2019

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற  6ஆவது ஆசிய பசிபிக் மாநாடு வெற்றிகரமாக நேற்று (நவம்பர், 21) நிறைவுற்றது. இலங்கை கடற்படை மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழு ஆகியன ஏற்பாடு செய்திருந்த இம் மூன்று நாள் கருத்தரங்கில் பங்களாதேஷ், கம்போடியா, சீனா, பிஜி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மாலைதீவு, மியான்மர், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், கொரியக் குடியரசு, சிங்கப்பூர், தாய்லாந்து, திமோர் கிழக்கு, வியட்நாம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருபத்தாறு அதிகாரிகள் கலந்துகொண்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மாநாடு கடற்படை யுத்த நடவடிக்கைகள் தொடர்பான சட்டம் (சர்வதேச மனிதாபிமான சட்டம்) எனும் தொனிப்பொருளின் கீழ் வழமையாக பங்கேற்கும் நாடுகளின் கடற்படை அதிகாரிகளுக்கு ஒரு சிறந்த தளத்தை அமைத்துள்ளது. இதன்போது, கடல்சார் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், போதைப்பொருள் எதிர்ப்பு, கடற்கொள்ளை, ஆட்கடத்தல்களுக்கான எதிர்ப்பு, சட்டவிரோதமான முறையிலும், பதிவு செய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்றமுறையிலும்  மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதை தடுத்தல், கடல்சார் மாசுருவதை தடுத்தல் மற்றும் கடல் எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அமல்படுத்துவதற்கான சர்வதேச விதிமுறைகளில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.