தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து பிராந்திய அமைதியை மீட்டெடுக்க இலங்கை உதவி - பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் குரேஷி

டிசம்பர் 03, 2019

நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்  பாராட்டத்தக்கது என இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி அவர்கள் தெரிவித்த்துள்ளார்.

பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் குரேஷி அவர்கள் இலங்கை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குனவர்தன அவர்களை நேற்று அவரது அமைச்சில் சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி முக்கிய துறைகளில் பன்முகப்படுத்தப்பட்டு அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்ல உள்ளதாகவும்  தெரிவித்தார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டுவதாகவும், நாடுகளுக்கிடையில் சுமுக உறவைப் பேணும் வகையில் புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்துகொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின்போது, தமது நாட்டுக்கு அரசமுறைப் பயணமொன்றினை மேற்கொள்ளுமாறு அவர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Courtesy : Ministry of Foreign Relations