--> -->

பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படை மற்றும் பொலிஸ் கூட்டாக செயற்பட வேண்டும் - பதில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா

ஜனவரி 02, 2020

நாட்டின் ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக் கருவுக்கு அமைய நாட்டினதும் நாட்டு மக்களினதும் அதிகபட்ச பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக பதில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா பதில் பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் அவர் முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் அவர்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

உலகலாவிய இராணுவத்தின் நவீன போக்கானது தன்னித்து செயற்படுவது அல்ல மாறாக அனைத்து படைகளையும் ஒன்றிணைத்து செயற்படுவது ஆகும் என தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரின் வழிகாட்டுதலில் முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் ஆகியோரை ஒருங்கிணைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் முப்படையினர்,பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ஒன்றிணைந்து செயற்பட்டதையும் இதன்போது அவர் நினைவு கூர்ந்தார்.

பதில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிக்கு முப்படைகளின் மரியாதை அணிவகுப்பு வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் குணவர்தன, மேற்கு பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, இராணுவத் தலைமையகத்தின் உபகரண மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் எம்ஏஏடி சிரிணாக, இராணுவத் தலைமையகத்தின் ஆயுத தளவாட மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சிஎம்டிபி சந்திரசேகர, இராணுவத் தலைமையகத்தின் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் பிஜே கமகே மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.