பாதுகாப்பு செய்திகள்
P 627 கப்பல் விஜயபாகு என்ற பெயரில் துறைமுக அதிகார சபைக்கு ஜனாதிபதி கையளித்தார்
அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ‘விஜயபாகு” என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் அதிகார சபைக்கு கையளிக்கும் நிகழ்வு, இன்று (22) மாலை கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தில் இடம்பெற்றது.
51வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் நேற்று மாலை (நவம்பர், 21) இடம்பெற்ற 51வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.
மடுவில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு மற்றும் மட்டக்களப்பில் பாடசாலை விளையாட்டு மைதானம் என்பன மக்களிடம் கையளிப்பு.
வன்னி மாவட்ட செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மடு பெரியபாண்டிவிரிச்சான் பிரதேசத்தில் இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பமொன்றுக்கு புதிய வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் கையளிக்கப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்திற்கு கடற்படை ஆய்வுகூட வசதிகளை வழங்குகிறது.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன், கடற்படையின் பல் மருத்துவ சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் பட்டதாரிகளுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அண்மையில் கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் நடைபெற்றது.
கடலோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான அவர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களை இன்று (நவம்பர் 16) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
கொரிய சிவில் இராணுவ செயற்பாட்டு தலைவர் இலங்கை இராணுவ மருத்துவ படையின் கொவிட் – 19 தடுப்பு முறைக்கு பாராட்டு
கொரிய குடியரசின் சிவில் இராணுவ நடவடிக்கை பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் தியோக்சங் ஜங் மற்றும் வெளிநாட்டுப் பணியமர்த்தல் பிரிவின் பிரதி பணிப்பாளர் லெப்டினன் கேணல் குவான்ஹியோ லீ ஆகியோர் சமீபத்தில் தென் சூடான் போரில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ படை கட்டம் 2 மருத்துவமனைக்குச் விஜயம் செய்து கொவிட் – 19, மலேரியா மற்றும் பிற தொற்று நோய்களைத் தடுப்பதற்காக லெப்டினன் கேணல் என்.எம் நிப்லர் ஆல் கட்டளையிடப்படும் 8 வது படையணியின் சுகாதாரப் பிரிவின் சிறந்த சேவைகளைப் பாராட்டினர்.
ஒட்டுசுட்டானில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு இராணுவத்தால் கையளிப்பு
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று, ஒட்டுசுட்டானில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பத்திற்கு அண்மையில் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
களனி ஆற்றில் ஏற்பட்ட தடைகளை இலங்கை இராணுவப் படையினர் அகற்றினர்
இலங்கை இராணுவப் படையினர் உடனடியாக செயற்பட்டு நவகமுவ, மாபிடிகம களனி 'பொடி பாலம' ஆற்று நீர் ஓட்டத்தை பாதித்த கொங்கிரீட் தூண்களைச் சுற்றியிருந்த மூங்கில் மரங்களின் அடைப்பை அகற்றும் பணியை சனிக்கிழமை (நவம்பர்12) முன்னெடுத்தனர்.
படைவீரர்கள் நினைவு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் ஞாபகார்த்த தின நிகழ்வு இன்று காலை (நவம்பர்,13) கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இடம்பெற்றது.
நாட்டின் பாதுகாப்பான இருப்புக்கு பாதுகாப்புத் துறை மற்றும் மூலோபாய
திறன்களின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்
ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக இருப்பதனால், முப்படைகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறன்களின் அவசியம் குறித்தும் அதற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார்.
கடலோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் புதிய பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான அவர்கள், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை இன்று (நவம்பர் 11) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.


















