பாதுகாப்பு செய்திகள்
சந்தஹிருசேய தூபி இம்மாதம் 18ம் திகதி பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது - பாதுகாப்பு செயலாளர்
சந்தஹிருசேய தூபி வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரால் இம்மாதம் 18ம் திறந்த வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டுக்காக வழங்கப் படவுள்ளதென பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) இன்று (நவம்பர், 07) தெரிவித்தார்
புத்தக வெளியீட்டு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து சிறப்பிப்பு
பனாகொட இராணுவப் பாசறையில் உள்ள இலங்கை காலாட்படை கேட்போர் கூடத்தில் இன்று (நவம்பர், 06) நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) கலந்து கொண்டார்.
பாதுகாப்பு செயலாளருக்கு 'பொப்பி மலர் ' அணிவிப்பு
இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் (ஒய்வு), பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கு (ஒய்வு) 'பொப்பி மலர்’ அணிவிக்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவம்பர்,01) இடம் பெற்றது.
கடற்படையின் கயன்திகா அபேரத்ன புதிய இலங்கை சாதனைகளை படைத்தார்
சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் ஒக்டோபர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடைபெற்ற 99 ஆவது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை கடற்படை வீராங்கனை கயன்திகா அபேரத்ன, மகளிருக்கான 1500 மீற்றர் மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இரண்டு புதிய இலங்கை சாதனைகளை படைத்தார்.
முலங்காவிலில் தேவையுடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கையளிப்பு
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடு வெள்ளாங்குளம், முலங்காவில் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பமான திருமதி. முத்து குமார் யஸீதா குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் நோயாளிகளுக்கு இராணுவத்தினரால் இரத்ததானம்
முல்லைத்தீவில் கடமையாற்றும் படையினர் கிளிநொச்சி இராணுவ வைத்தியசாலையில் அண்மையில் இரத்ததான வழங்கும் நிகழ்வினை மேற்கொண்டனர்.
அலங்கார மீன்களை வளர்ப்பு திட்டம் இராணுவத்தினரால் ஆரம்பிப்பு
அரசாங்கத்தின் நன்னீர் மீன் வளர்ப்புக்கு ஊக்கமளிக்கும் வகையில், கந்தகாடு இராணுவப் பண்ணையில் ‘திலப்பியா’ மீன் குஞ்சுகள் மற்றும் அலங்கார மீன்களை வளர்க்கும் முயற்சியில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பானமவில் கடற்படையினரால் நீர் சறுக்கல் விளையாட்டு கிளப் திறந்து வைப்பு
இலங்கை கடற்படை அண்மையில் பானமவில் ஒரு புதிய நீர் சறுக்கல் விளையாட்ட கிளப்பை நிறுவியுள்ளது.
ஜனாதிபதிக்கு முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது…
இலங்கை முன்னாள் பாதுகாப்புப் பணியாளர் சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இராணுவ வீரர்களை நினைவுகூரும் பொப்பி மலர் தின நிகழ்வின் முதலாவது பொப்பி மலர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.
பிரான்ஸில் நடைபெரும் உலக இராணுவ ஜூடோ போட்டிகளில் பங்கேற்க என்பது இராணுவ ஜூடோ வீரர்கள் பயணம்
இந்த மாதம் 28ம் திகதி முதல் நவம்பர் 04ம் திகதி வரை பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள 2021 உலக இராணுவ ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் சார்பில் ஒன்பது வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.