பாதுகாப்பு செய்திகள்
ரஷ்ய பாதுகாப்பு சபை செயலாளர் இலங்கைக்கு வருகை
ரஷ்ய பாதுகாப்பு சபையின் செயலாளர் நிக்கோலாய் பட்ருஷேவ் நேற்றைய தினம் (நவம்பர், 22) இலங்கைக்கு வருகை தந்தார்.
50வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் நேற்று மாலை (நவம்பர், 21) இடம்பெற்ற 50வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஒய்வு) விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.
போர்வீரர்கள் ஞாபகார்த்த தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் இன்று ( நவம்பர்,14) நடைபெற்ற போர்வீரர்கள் ஞாபகார்த்த தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினராலும் நிவாரண நடவடிக்கைகள்
நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை இராணுவத்தினர் வழங்கி வருகின்றனர். இதற்கமைய அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறுபட்ட மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
மஹா ஓயா தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மஹா ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவசர நடவடிக்கைகளின்போது உதவ கடற்படையின் வெள்ள நிவாரண குழுக்கள் தயார் நிலையில்
நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.




















