பாதுகாப்பு செய்திகள்
பாதுகாப்பு செயலாளர் கடலோர பாதுகாப்புப்படை தலைமையகத்திற்கு விஜயம்
பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஒய்வு) கடலோர பாதுகாப்புப்படை தலைமையகத்திற்கு நேற்றையதினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80,437ஆக உயர்வு
இன்று மார்ச் 04ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 356 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 84,225 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இந்திய விம்மனப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பஹதோரியா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஒய்வு) வை இன்று சந்தித்தார்.
துப்பாக்கி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தலுக்கான காலம் நீட்டிப்பு
துப்பாக்கி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தலுக்கான கால எல்லை எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
'தீகவாபிய அருண' நிதியத்திற்கு பௌத்த தொலைக்காட்சி சேவை 50 மில்லியன் ரூபா நன்கொடை
'தீகவாபிய அருண' நிதியத்திற்கு பௌத்த தொலைக்காட்சி சேவையினால் 50 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.
இலங்கை விமானப்படை இன்று 70ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
வான் காவலர்கள் எனும் மகுட வாசகத்தை கொண்ட இலங்கை விமானப்படை தனது 70ம் ஆண்டு நிறைவை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தலைமையில் இன்றையதினம் கொண்டாடுகிறது.
475 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினர்
இன்று மார்ச் 2ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 310 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 83,551 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு செயலகம் ஸ்தாபிப்பு
இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு செயலகம் கொழும்பில் ஸ்தாபிப்பு
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 'போர்க் கருவியாக இலங்கை சிறுவர்கள்' எனும் கலந்துரையாடல்
'போர்க் கருவியாக இலங்கை சிறுவர்கள்' எனும் தலைப்பில், தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று வெளிவிவகார அமைச்சில் அண்மையில் இடம்பெற்றது.
நாட்டில் 10,421 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு
இன்று மார்ச் 01ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 352 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 83,241 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
கடந்த 23ம் திகதி மன்னாரிலிருந்து கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற நிலையில் நடுக்கடலில் தத்தளித்த இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று மீட்டது.
நாரங்கல மலைத்தொடரில் உயிரிழந்தவரின் உடல் இராணுவத்தினரால் மீட்பு
பதுளை, நாரங்கல மலைத்தொடரில் நேற்று இடம்பெற்ற மலையேற்றப் பயணத்தின் போது காணாமல் போன 24 வயதுடைய அகலங்க பெரேரா என்பவரின் சடலம் இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.
நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,372 ஆக அதிகரிப்பு
இன்று பெப்ரவரி 28ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 460 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 82,889 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.