பாதுகாப்பு செய்திகள்
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மீதான பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறது
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்
கடற்படையினரும் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை
ராஜகிரிய பிரதேசத்தில் கடற்படையினரும் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 313 கிராம் மற்றும் 250 மில்லி கிராம் ஐஸ் ரக போதை பொருள், சுமார் 47 கிராம் மற்றும் 600 மில்லி கிராம் ஹஷிஷ் போதை பொருள் ஆகியவற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடற்படையினரால் கொவிட்-19 க்கான இடைநிலை பராமரிப்பு மையங்களை அமைப்பு
கொவிட்-19 தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை நேற்று (மே 04) காலியில் உள்ள பூச கடற்படைத் தளத்தில் கோவிட் -19 க்கான இடைநிலை பராமரிப்பு மையத்தை நிறுவியது.
தேசிய படை வீரர்கள் கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு
படை வீரர்கள் நினைவு மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.
ரூ.55 மிலியன் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
யாழ்ப்பாணம், வட காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை இணைந்து நடாத்திய விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது 183 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கின் கங்கையில் ஏற்பட்ட அடைப்பு கடற்படையினரால் சீரமைப்பு
காலி, ஜின் கங்கையின் வக்வெல்ல பாலத்தின் கீழ் ஒன்று சேர்ந்த குப்பை கூளங்கள் மற்றும் கழிவுப்பொருட்களை கடற்படையினர் நேற்று (மே 1) அகற்றினர்.
கோல் டயலோக் - 2021 உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்
இலங்கை கடற்படையினரால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச கடல்சார் மாநாடான 'கோல் டயலோக் - 2021" கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஒக்டோபர் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இம்முறை ஏற்பாடு செய்யப்படும் இந்த சர்வதே கடல்சார் மாநாடு, இம்மாநாடு தொடரின் பதினோராவது தடவையாகும்.


















.png)

