பாதுகாப்பு செய்திகள்
இரண்டு இராஜாங்க அமைச்சுகளுக்கு அமைச்சர் சமல் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்
தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும் அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷநேற்று (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பெயர்ப்பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கடற்படையின் "கஜபாகு" கப்பல் "அமான் - 2021" சர்வதேச கடற்படை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பு
பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்ற "அமான் 2021" சர்வதேச கடற்படை கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் "கஜபாகு" கப்பல் பங்கேற்றது. இம்மாதம் 12ம் திகதி இடம்பெற்ற இந்த கூட்டுப்பயிற்சியில் கலந்து கொண்ட 45 நாடுகளின் கப்பல்களில் இலங்கை கடற்படையின் "கஜபாகு" கப்பலும் ஒன்றாகும்.
நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,175 ஆக அதிகரிப்பு
இன்று பெப்ரவரி 18ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 722 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 77,905 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால் கைகாவளை ஆரம்ப பாடசாலை விளையாட்டு மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்
மீமுரே பிரதேசத்தில் உள்ள கைகாவளை ஆரம்பப் பாடசாலையின் நீண்ட கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இராணுவத்தினர் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை புனரமைக்கும் பணியை அண்மையில் ஆரம்பித்தனர்.
நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70,428 ஆக அதிகரிப்பு
இன்று பெப்ரவரி 17ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 756 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 77,183 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
16 கிலோ கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால் பறிமுதல்
யாழ்ப்பாணம், உடுத்துறை, மன்னார், உப்புக்குளம் ஆகிய இடங்களில் நேற்றய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது இலங்கை கடற்படையினரால் 16 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 69,410 ஆக அதிகரிப்பு
இன்று பெப்ரவரி 16ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 774 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 76,427 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
புத்தளவில் இராணுவத்தினர் 900 மரக்கன்றுகள் நடுகை
புத்தள ரஜ மகா விகாரை வளாகத்தில் இலுப்பை, நாகை மற்றும் மருது ஆகிய அறிய 900 மரக்கன்றுகளை இராணுவம் அண்மையில் நடுகை செய்தது
நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 68,695 ஆக அதிகரிப்பு
இன்று பெப்ரவரி 15 ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 802 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 75,653 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பெல்லன்வில விஹாரை 'அரச மர எல்லை பகுதி'யின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்
பெல்லன்வில விஹாரையில் 'அரச மர எல்லை பகுதி' (போதிகர) அபிவிருத்தி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கெளரவ பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்றது.
வெளிநாட்டில் படை பணிகளை நோக்காகக் கொண்டு இராணுவத்தினரால் களமுனை பயிற்சிகள் முன்னெடுப்பு
ஐ.நா அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடவுள்ள இராணுவ பணிக்குழுவுக்கு முன்னாயத்த பயிற்சி அளிக்கும் வகையில் 'ஹர்மட்டன் - 3' என்ற ஆயத்த களமுனை பயிற்சி இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.