பாதுகாப்பு செய்திகள்
மொத்தம் 10,111 பீசிஆர் சோதனைகள் நேற்று முன்னெடுப்பு
நாட்டில் இதுவரை 637,122 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 10,111 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மாலியில் உள்ள இலங்கை படையினரின் தொழில்முறை மற்றும் ஒழுக்கத்திற்கு பாராட்டு
மாலி நாட்டில் ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை படையினரின் செயல்திறன் உயர்மட்ட தொழில் நிபுணத்துவம் அனைத்து மட்டங்களிலும் உள்ள ஒழுக்கம் என்பவற்றை ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படைகளின் கட்டளைத் தளபதி பாராட்டியுள்ளார்.
முப்படைகளுக்கு முகக் கவசங்கள் அன்பளிப்பு
வரையறுக்கப்பட்ட பியூரிட்டாஸ் நிறுவனத்தினால் ஒரு தொகை நடைப்பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் முக கவசம் மற்றும் சாதாரண முக கவசம் என்பன பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
நேற்று 10,207 பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு
நாட்டில் இதுவரை 629,315 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 10, 207 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சுமார் 2 மில்லியன் பெறுமதியான உயிரியல் பாதுகாப்பு பெட்டகம் கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு
நாராஹென்பிட்டவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு சுமார் 2 மில்லியன் ரூபா பெறுமதியான உயிரியல் பாதுகாப்பு பெட்டகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
31 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மடகல்துறை கரையோரப் பிரதேசங்களில் கடற்படையின் வடபிராந்திய கட்டளையாக கடற்படை வீரர்களினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 100 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
தீகவாபி தூபியின் மீள் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்
தீகவாபி தூபியை மீள் நிர்மாண செய்வதற்கான அடிக்கள் நாட்டும் வைபவம் இன்று இடம் பெற்றது. அம்பாறையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ தூபியை மீள் நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
பிராந்திய 'கோவிட் -19' செயல்பாட்டு மையம் மட்டக்களப்பில் நிறுவப்பட்டது
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கொவிட் - 19 தொடர்பான எந்தவொரு சவால்களையும் முறியடிக்கும் வகையில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 பிரிவின் இராணுவத்தின் 231வது பிரிகேட் படையினரால் மாவட்டத்திற்கான முதல் கொவிட் - 19 செயல்பாட்டு மத்திய நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
விமானப்படடையின் ஆறாவது தொகுதியினர் ஐ.நா.வின் அமைதி காக்கும் பணிகளுக்காக மத்திய ஆபிரிக்க குடியரசு நோக்கி பயணம்
மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நா அமைதிகாக்கும் படையில் கடமை புரிந்து நாடு திரும்ப உள்ள ஹெலிகாப்டர் படையணி வீரர்களுக்கு பதிலாகவே இவர்கள் அங்கு கடமைக்காக செல்லவுள்ளனர்.
நாட்டின் பல பாகங்களிலும் பலத்த மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு
நாட்டில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலும் பல இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
28 தனிமைப்படுத்தல் மையங்களில் 2, 277 பேர் தனிமைப்படுத்தலில்
படைகளால் மேற்பார்வை செய்யப்படும் 28 தனிமைப்படுத்தல் மையங்களில் மொத்தமாக 2277 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்று பரவலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது தொடர்பாக இராணுவத்தினரால் விழிப்புணர்வு பிரச்சாரம்
ஆனைவிழுந்தான் குளம் பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள், கொரோனா வைரஸ் தொற்று பரவலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது தொடர்பாக அறிவுறுத்தும் சுவரொட்டி பிரச்சாரம் திட்டம் இலங்கை இராணுவத்தின் 652வது பிரிகேட்டினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த 64,075 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 356 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டதையடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 14,285 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரியா விடை பெறும் இந்திய உதவி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து பிரியா விடை பெறும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேர்ணல் ரவி ஷேகர் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு ) கமல் குணரத்ன இன்று (நவம்பர்,10) சந்தித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள கடுமையாக ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படும்
எவ்வாறாயினும் கொழும்பு கம்பஹா களுத்துறை கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள 25 பொலிஸ் பிரதேசங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக குருநாகல் நகரம் மற்றும் பாணந்துறை வேகந்த மேற்கு கிராம சேவகர் பிரிவு என்பனவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மானிப்பாயில் கைவிடப்பட்ட நிலையில் முருகர் சிலை பொலிஸாரால் கண்டுபிடிப்பு
கைவிடப்பட்ட நிலையில் 7 அங்குல உயரமுள்ள முருகக் கடவுளின் சிலை, மூன்று மயில் சிலைகள் மற்றும் அடையாளம் காணப்படாத உலோகப் பாத்திரங்கள் என்பவற்றை மணிப்பாய் பொலிஸார் நேற்று கைப்பற்றினர். யாழ்ப்பாணம் மணிப்பாய் சங்கனாய் கோவில் அருகே பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.