பாதுகாப்பு செய்திகள்
மருந்துகளை வீடுகளுக்கு சென்று விநியோகிக்க நடவடிக்கை – சுகாதார அமைச்சு
அரசாங்க வைத்தியசாலைகளில் மாதாந்தம் சிகிச்சை பெற்றுவரும் தொற்றா நோயாளர்கள் மற்றும் வயோதிப நோயாளர்கள் மறு அறிவித்தல் வரை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவித்துள்ளதுடன், அவர்களுக்கான மருந்துகளை அவர்களது வீடுகளுகு சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1186 ஆக அதிகரிப்பு –கொவிட் மையம்
மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணியாற்றிய இருவர் மற்றும் குறித்த கொத்தணியில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 103 பேர் அடையாலம்கானபட்டதை அடுத்து கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1186 ஆக அதிகரித்துள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாடு முழுவதும் குறிப்பாக நாட்டின் தென் மேற்கு பகுதிகளில் ஆரம்பமாகியுள்ள தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்று இரவிலிருந்து எதிர்வரும் சில நாட்களில் தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கைத்துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
விஷேட புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று மாலை (ஒக்டோபர், 09) பதுளையில் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மெகசின் ஒன்றுடன் ஆறு வெடிபொருட்கள் ஆகியவற்றை 250,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் 71வது ஆண்டு தினம் இன்று
இலங்கை இராணுவம் 71வது ஆண்டு நிறைவு தினம் இன்றாகும் (ஒக்டோபர்,10) .
உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என அரசாங்கம் வேண்டுகோள்
சமூக ஊடக வலைத்தளங்தளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என அரசாங்கம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகர், கெப்டன் விகாஷ் சூட், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று (ஒக்டோபர்,09) சந்தித்தார்.
ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில் பொதுமக்கள் நலன்கருதி அத்தியாவசிய சேவைகள் நிலையங்கள் திறப்பு
கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள 18 பொலிஸ் பிரிவுகளிலும் பொதுமக்களின் நலன்கருதி அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
2020க்கான ஷார்ப் ஷூட்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விமானப்படையினர் வெற்றி
சர்வதேச பிரக்டிகள் ஷூட்டிங் அமைப்பினால் கண்டியில் நடாத்தப்பட்ட ‘ஷார்ப் ஷூட்டர் சாம்பியன்ஷிப்- 2020’ போட்டியில் இலங்கை விமானப்படை ஷூட்டிங் குழுவினர் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொட பொலிஸ் அதன் நடவடிக்கைகளை தொடர்கிறது - டி.ஐ.ஜி அஜித் ரோஹனா
மினுவாங்கொடை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்துள்ளதுடன், கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு சுகாதார நடவடிக்கைகளை பேணி மீண்டும் பொலிஸ் அதன் நடவடிக்கைகளை தொடர்வதாக பொலிஸ் சட்டம், ஒழுங்குகளுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகணா பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
கொழும்பு பிரதான பயணிகள் பேருந்து நிலையம் கடற்படையினரால் கிருமி தொற்று நீக்கம்
பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துவரும் இலங்கை கடற்படையினரர், கொழும்பு கோட்டையில் மாகாணங்களுக்கிடையிலான பிரதான பயணிகள் போக்குவரத்து நிலையங்களில் கிருமி தொற்று நீக்க செயற்பாடுகளை நேற்று (ஒக்டோபர், 8) முன்னெடுத்துள்ளனர்.
கொட்டகல பகுதியில் வீழ்ந்த பாரிய கற்பாறை ஒன்றை இராணுவத்தினர் அகற்றியுள்ளனர்
கொட்டகல பகுதி மக்களின் இரு பக்கங்களுக்குமான போக்குவரத்தினை தடைசெய்யும் வகையில் வீதியின் நடுவே வீழ்ந்த பாரிய கற்பாறை ஒன்றை அனர்த்த நிலைமைகளின் போது ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
ராகம வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி தொடர்பில் தகவல் தேடும் பொலிஸார்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற நபரை தேடி கண்டு பிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி உள்ளனர்
இராணுவத்தின் 71ஆவது ஆண்டு விழா நிகழ்வுகள் இரத்து
கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இராணுவத்தின் 71ஆவது ஆண்டு விழா நிகழ்வுகள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை பெற்றுக்கொள்ளல்
கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை பெற்றுக்கொள்ளலவும் பொலிஸ் தொடர்பான ஏனைய தகவல்களை பெற்றுக் கொள்ளவும் பின்வரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பல்வேறு பகுதிகளுக்கு நீடிப்பு
கம்பஹா மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.