பாதுகாப்பு செய்திகள்
30 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவம் தென்னங்கன்றுகள் நடுகை
'துரு மிதுரு - நவ ரடக்' பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் குட்டிகலையில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னங்கன்றுகளை நடுகைசெய்யும் பணியை இராணுவம் அங்குரார்ப்பணம் செய்து வைத்தது.
நாட்டில் 14,125 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 649 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 27,876 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ரணவிரு சேவா அதிகார சபையினால் நல திட்டங்கள் அறிமுகம்
ரணவிரு சேவா அதிகார சபையின் அனுசரணையுடன் சலுகை விலையில் கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு சீமெந்துப் பைகளை வழங்குவதற்காக இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றினை பிரபல சீமெந்து உறபத்தி நிறுவனமான ஐஎன்எஸ்ஈஈ சீமெந்து செய்து கொண்டது. இந்த நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்றது.
தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வரும் பாதுகாப்பு திணைக்களம் - பாதுகாப்பு செயலாளர்
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சிவில் பாதுகாப்பு படை திணைக்களம் தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வருவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் மேலும் குறைவடையும் - வளிமண்டலவில் திணைக்களம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் குறிப்பாக காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
‘புரெவி’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இராணுவம் மற்றும் கடற்படையினர் உதவி
இலங்கை இராணுவமும் கடற்படையினரும் இம்மாதம் 2ம் திகதி ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள பொதுமக்களுக்கு உதவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
புரெவி சூறாவளி மேலும் வலுவிழந்துள்ளது - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு
புரெவி சூறாவளியானது ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவிழந்து இன்று அதிகாலை மன்னாருக்கு மேற்குத் திசையில் ஏறத்தாழ 143 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்தது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் 13,632 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 628 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 26,037 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புரெவி சூறாவளி படிப்படியாக வலுவிழக்கிறது - வளிமண்டலவியல் திணைக்களம்
புரெவி சூறாவளியானது தற்போது மன்னாருக்கும் பூநகரிக்கும் இடையில் கரையோரப் பிரதேசங்களுக்கு அருகே நிலை கொண்டுள்ளதுடன் படிப்படியாக நாட்டை விட்டு விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை துறைமுகத்திலிருந்து மூன்று ரஷ்ய கப்பல்கள் தாயகம் திரும்பின
திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த மூன்று ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் இன்று (டிசம்பர்.3) இலங்கையிலிருந்து தாயகம் நோக்கி புறப்பட்டன.
நாட்டில் 13,423 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 878 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25,409 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளரினால் 31 மனநல ஆலோசகர்களுக்கு நியமனம் கடிதங்கள் வழங்கி வைப்பு
உதவி மனநல ஆலோசகர்கள் மற்றும் மனநல ஆலோசக உதவியாளர்கள் 31 பேருக்கு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவினால் புதிதாக நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ராஜகிரியவில் உள்ள தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையில் இன்று (டிசம்பர், 02) இடம்பெற்றது.
















