--> -->
செய்திகள்   செயலாளர் செய்திகளைப் பாதுகாக்கவும்

செயலாளர் செய்திகளைப் பாதுகாக்கவும்

Defense News | பாதுகாப்பு செய்திகள்

புனித அந்தோனியார் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை விரைவில் நிறைவு செய்ய பாதுகாப்பு செயலாளர் உறுதி

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு இன்று (ஜூலை 1) விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல்  (ஓய்வு) கமல் குணரத்ன, தேவாலயத்தின்  பாதுகாப்பை பலப்படுத்த துரித நடவடிக்கை எடுத்ததாகவும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் மோசமாக சேதமடைந்த தேவாலயத்தின் எஞ்சிய  புனரமைப்புப்பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும்  உறுதியளித்தார்.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

துல்லியமான வானிலை எதிர்வுகூறல்களுக்காக வளிமண்டல திணைக்கத்திற்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டு

துல்லியமான வானிலை எதிர்வுகூறல்களை வழங்குவதற்காக புதிய உபகரணங்கள், பகுப்பாய்வு மென்பொருள் மற்றும் புதிய அமைப்புகள் என்பன விரைவில் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.



Defense News | பாதுகாப்பு செய்திகள்

ஆர்பாட்டக்காரர்களை கலைக்க நீதிமன்ற உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் பொலிஸார் செயல்பட்டனர் - பாதுகாப்பு செயலாளர்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட கண்டிப்பான தனிமைப்படுதல் சட்டவிதிகளுக்கு அமைவாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரிலுமே முன்னணி சோசலிஸ கட்சியைச் சேர்ந்த ஆர்பாட்டக்காரர்களை கலைக்க போலீசார் நடவடிக்கை எடுத்ததாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு ஜப்பானிய அரசு பாராட்டு

நாட்டில் கொரோனா வைரஸை எதிர்த்து செயற்படுவதற்கு சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் வகிபாகத்தை ஜப்பானிய அரசு பாராட்டியுள்ளது.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

இராணுவம் மற்றும் பொலிஸார் தங்கள் தொழில்முறை மற்றும் நிபுணத்துவத்தை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதன் மூலம் நிரூபித்துள்ளனர் - பாதுகாப்பு செயலாளர்

முப்படை மற்றும் பொலிஸார் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களது நிபுணத்துவம் மற்றும் தொழில்முறை விருத்தி என்பவற்றை நிரூபித்துள்ளனர் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

 


Defense News | பாதுகாப்பு செய்திகள்

முழுமையாக முடக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை - பாதுகாப்பு செயலாளர்

நாட்டில் கொரோனா தாக்கம் தொடர்பான தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு, நாட்டினை முழுமையாக முடக்கும் (லொக்டவுன்) தீர்மானம் எதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

ஊரடங்குச் சட்டத்தினை மதித்து நடக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் வலியுறுத்து

பொதுமக்களின் நடமாட்டத்தை  கட்டுப்படுத்துவதற்காகவும்   யாழ் குடா நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் அவற்றிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காகவும் அரசாங்கத்தினால்    ஊரடங்கு சட்டத்தினை  மீண்டும்   நாடுமுழுவதும் அமுல்படுத்த  நேரிட்டதாக  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பது அவசியம் - பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

கொரோனா வைரஸ் அல்லது கோவிட் - 19 பரவலை தடுக்க  அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்  குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில்,  சமூக ஊடகங்கள் மூலமாக  வதந்திகளை  பரப்பி வரும் நபர்கள்  தொடர்பில் மிகுந்த அவதானத்தயுடன் செயற்படுமாறு  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அனைத்து இலங்கையர்களையும் கோரியுள்ளார். வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர்கள் உள்ளடங்களாக அனைவரும்  வீட்டுகளில்  தரித்திருப்பதன்  மூலமும், சுகாதார மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலமும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

கொரோனாவை இல்லாதொழிக்க இராணுவ வைத்திய குழுக்களின் அர்ப்பணிப்புடனான செயற்பாடுகள் பாராட்டத்தக்கது - பாதுகாப்பு செயலாளர்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முப்படை மருத்துவக் குழுக்கள் அச்சமின்றியும் மிகுந்த அர்ப்பணிப்புடனும்  செயற்படுவதை பாராட்டிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன, எமது நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் போது பாதுகாப்பு படையினர் முன்னின்று செயற்படுவதாகவும் தெரிவித்தார்.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முழுமையாக செயற்படுகிறது – பாதுகாப்பு செயலாளர்

இலங்கையில் வசிக்கும் 21.4 மில்லியன் மக்களையும் கொரோனா வைரஸ் தொற்றுவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் அரசு சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

போர் வீரர்களுக்கான முதலாவது நடமாடும் சேவை பாதுகாப்பு அமைச்சினால் களுத்துறையில் ஆரம்பித்து வைப்பு

போர் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன்களை பேண அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும், இதற்காக  புதிய அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக தற்போதுள்ள சட்டமூலங்களை அரசு  மீளாய்வு செய்யும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

தீவிரமயமாக்கல், மதவாத தீவிரப்போக்கு மற்றும் ஏனைய எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது - பாதுகாப்பு செயலாளர்

தீவிரமயமாக்கல், பயங்கரவாதம் மீள் எழுச்சி, பிரிவினைவாதம், மத தீவிரவாதம், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உள்ளக வேலைநிறுத்தங்கள் என்பன பிரதான சவால்களாக காணப்படுவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தனது முழுக்கவனத்தையும் செலுத்திவருவதாகவும் தெரிவித்தார்.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

'விருசர' வரப்பிரசாத அட்டைகள் மூலம் 200,000ற்கு மேற்பட பாதுகாப்பு படை வீரர்கள் பயன்

தாய்நாட்டிற்காக உயிர்நீர்த்த படைவீரர்களின் குடும்பங்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்கள் உட்பட 200,000ற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களுக்கு  ‘விருசர’ வரப்பிரசாத அட்டைகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

'விருசுமிதுரு' வீடமைப்புத் திட்டத்தை துரிதப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சு

தாய் நாட்டிற்காக உயிர்நீர்த்த  மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களது  குடும்பங்களின் வீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட "விருசுமிதுரு" வீடமைப்புத் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சு துரிதப்படுத்தியுள்ளது.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

புலிகளின் பயங்கரவாதத்தை இராணுவம் தோற்கடித்த போதிலும், சில தமிழ் அரசியல்வாதிகள் அதன் கொள்கைகளை இன்னும் பரப்புகின்றனர் - பாதுகாப்பு செயலாளர்

இலங்கை இராணுவம் 10 வருடங்களுக்கு முன்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை இராணுவ ரீதியில் முற்றாக தோற்கடித்திருந்த போதிலும், சில தமிழ் அரசியல்வாதிகள் அதன் பிரிவினைவாத கொள்ககையை தமிழ் மக்களிளிடையே பரப்புவதற்கு  முயற்சிப்பதாகவும் எனவே அதனை முறியடிக்கும் சவால்கள்  தற்ப்பொழுதும் காணப்பட்டுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

 


Defense News | பாதுகாப்பு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சிஐடியினர் முன்னெடுக்கும் விசாரணைகளை துரிதப்படுத்த விஷேட செயலணி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரனைகளை துரிதப்படுத்தி அதன் முன்னேற்றங்களை கண்காணிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சு விஷேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளது.

 


Defense News | பாதுகாப்பு செய்திகள்

காணாமல் போனோரின் குடும்பங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுக்கின்றது

காணாமல் போனோரின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரால் தகவல் திரட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளதை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுக்கின்றது. 


Defense News | பாதுகாப்பு செய்திகள்

துறைசார் மற்றும் ஒழுக்கமுள்ள பொலிஸாரே நாட்டுக்கு தேவை- பாதுகாப்பு செயலாளர்

நாட்டில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய துறைசார் மற்றும் ஒழுக்கமுள்ள பொலிஸாரின் அவசியத்தை பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு)கமல் குணரத்ன வலியுறுத்தினார்.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

பயங்கரவாதத்தினை முறியடித்த இலங்கையின் அனுபவங்களை பகிர்ந்த கொள்ள துருக்கி எதிர்பார்ப்பு

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய  இலங்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், வன்முறை அடிப்படையிலான  தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படும் வகையில் புலனாய்வு தகவல் பகிர்வை மேம்படுத்துவதற்கும்  துருக்கி எதிர்பார்க்கிறது.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆப்காணிஸ்தான் ஒத்துழைப்பு

தெற்காசிய பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும் பொருட்டு இலங்கைக்கு முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு  ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தனது ஒத்துழைப்பினை வழங்கும் என இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எம். அஷார்ப் ஹைதரி உறுதியளித்தார்.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

பயங்கரவாதத்திற்கு இடமளிக்க போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் உறுதியளிப்பு


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையின் கீழ் எதிர்காலத்தில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு  இடமளிக்க போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன உறுதியளித்துள்ளார்.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

ரணவிருசேவா அதிகார சபை அதன் சேவையை மேலும் விஸ்தரிப்பு

தாய்நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விஸ்தரித்து ஒரே கூரையின்கீழ் பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் ரணவிருசேவா அதிகார சபை மேலும் மேம்படுத்தப்படும்.


Defense News | பாதுகாப்பு செய்திகள்

இலங்கையின் அரச துறையை நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கு இஸ்ரேலிய அரசாங்கம் உதவி

இலங்கையின் அரச துறை நவீனமயப்படுத்தல் மற்றும் இணைய பாதுகாப்பு அபிவிருத்திக்கு இஸ்ரேலிய அரசாங்கம் உதவ தயார்.  


Defense News | பாதுகாப்பு செய்திகள்

டிபெக்ஸ்போ–20 பாதுகாப்பு கண்காட்சியில் இந்திய பாதுகாப்பு முக்கியஸ்தர்களுடன் பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

லக்னோவில் நடைபெறும் 11வது ‘டிபெக்ஸ்போ-2020’ பாதுகாப்பு கண்காட்சியில்  கலந்து கொள்ளுமாறு இந்தியாவினால் விடுக்கப்பட்ட  அழைப்பிற்கு அமைய  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இந்தியா சென்றடைந்தார்.