செயலாளர் செய்திகளைப் பாதுகாக்கவும்
பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதில் இலங்கைக்கு முக்கிய பங்குண்டு - பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி
பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் இலங்கையின் வகிபாகம் இன்றியமையாத ஒன்றாகும் என பாகிஸ்தான் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் முஜாஹித் அன்வார் கான் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் இலங்கையுடன்புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாகவும் உறுதியளித்தார்.
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் அட்மிரல் ஜெயனாத் கொலம்பகே நியமனம்
இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின்பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் அட்மிரல் ஜெயனாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையுடன் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்ள பாகிஸ்தான் உறுதி
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை வெற்றிகரமாக முறியடிக்கும் செயற்பாடுகளுக்கு புலனாய்வு தகவல்களை பகிர்வதனூடாக முழுமையான ஒத்துழைப்பு வழங்க பாக்கிஸ்தான் உறுதியளித்துள்ளது.
தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களை ஒழுங்குபடுத்தும் பாதுகாப்பு அமைச்சு
பாதுகாப்பு கடைமையில் ஈடுபடுவோருக்குக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்துதல், புதிய பாதுகாப்பு நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் அனுமதி பத்திரங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
போதைபொருள் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சினால் விஷேட செயலணி
திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் போதைபொருள் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக வெகுவிரைவில் விஷேட செயலணி ஒன்று உருவாக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க இலங்கைக்கு பாக்கிஸ்தான் ஒத்துழைப்பு
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் செயற்பாடுகளை முறியடித்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு பாக்கிஸ்தான் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
சிறுநீரக சுத்திகரிப்பு வசதிகளுடன் பொலிஸ் வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படும்- பாதுகாப்பு அமைச்சு
நாரஹன்பிட்டவில் அமைந்துள்ள பொலிஸ் மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவிய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய பாதுகாப்பு அமைச்சு முன்வந்துள்ளது.
அரசாங்கம், ஒருங்கிணைந்த அமைப்பின் ஊடாக முழு அரச இயந்திரத்தையும் டிஜிட்டல் மயமாக்கவுள்ளது
அரசாங்கம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) மேற்பார்வை மற்றும் நிர்வாகத்தின் கீழ் தகவல் தொலைதொடர்பு தொழில்நுட்பம் (ICT) மூலம் ஒருங்கிணைந்த அமைப்பின் ஊடாக முழு அரச பொறிமுறையையும் டிஜிட்டல் மயமாக்கவுள்ளது.
ஒழுக்கமிகுந்த பிரஜைகளை உருவாக்க மாணவ படையணியை பிரபல்யமாக்குவது அவசியமாகும் - பாதுகாப்புச் செயலாளர்
பாடசாலைகளில் மாணவ படையணியை பிரபலபடுத்துவதன் மூலம் ஒழுக்க விழுமியங்களை பேணி சட்டத்தை மதிக்கும் பிரஜைகளை உருவாக்க முடியும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் வேண்டுகோள்
திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த செயல்திறன் மிக்க உத்திகளை மேற்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு பொலிஸாரிடம் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சந்தஹிரு சேய தூபியின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் பணிப்பு
இலங்கையின் நான்காவது உயர்ந்த தாது கோபுரமான சந்தஹிரு சேய தூபியின் எஞ்சியுள்ள நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு சமபந்த்தப்பட்ட பாதுகாப்பு படை அதிகாரிகளை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன பணித்துள்ளார்.
தவறாக வழி நடாத்தப்பட்ட இளைஞர்களை நெறிப்படுத்த முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது - பாதுகாப்பு செயலாளர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புபட்ட மற்றும் தவறாக வழி நடாத்தப்பட்ட இளைஞர்களை நெறிப்படுத்த முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்த்துள்ளார்.
போதை வஸ்து பாவனையிலிருந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் – பாதுகாப்பு செயலாளர்
விசேடமாக அமைக்கப்பட்ட சட்ட அமுலாக்கள் பிரிவுகளின் உதவியுடன் போதைப்பொருளுடன் தொடர்புபட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பானது அலட்சியம் மற்றும் அறியாமை காரணமாகவே புறக்கணிக்கப்பட்டது – பாதுகாப்பு செயலாளர்
நாட்டின் தேசிய பாதுகாப்பானது கடந்தகாலங்களில் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டதன் காரணமாகவே புறக்கணிக்கப்பட்ததாகவும் மாறாக தற்போதைய அரசாங்கம் பாதுகப்பானாதும் அமைதியானதுமான தேசத்தை உருவாக்கியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன இன்று (13) தெரிவித்தார்.
நோர்வே தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
நோர்வே தூதுவர் ட்ரைன் ஜெரான்லி எஸ்கெடல் (Trine Jøranli Eskedal ) பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (ஜனவரி, 08) சந்தித்தார்.
ஹெய்லிஸ் குழுமம் சுற்றுச்சூழல் பொலிஸாருக்கு 10,000 கையுறைகளை நன்கொடையாக அளிப்பு
அரசாங்கத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் கருத்துட்டத்திற்கு அமைய ஒரு தொகை இரப்பர் கையுறைகளை ஹெய்லீஸ் குழுமத்தின் கீழ் செயல்படும் டிப் தயாரிப்பு நிறுவனம் பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுக்கு இன்று (ஜனவரி,07) கையளித்தது.
பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கிளையின் பணிகள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மீளாய்வு
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இன்று (ஜனவரி,07) கொழும்பு 03, கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கிளைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
ஐ.நாவிற்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி ஷேணுகா செனவிரத்ன பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை சந்தித்தார்.
மேஜர் ஜெனரல் (ஓய்வு) டபிள்யு. ஆர். பலிஹக்கார பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பணிப்பாளராக நியமனம்
பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேஜர் ஜெனரல் (ஓய்வு) டபிள்யு. ஆர். பலிஹக்கார
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்த ஈரான் தூதுவர் வலியுறுத்தல்
இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேம்படுத்த இலங்கைக்கான ஈரானிய தூதுவர் முஹம்மட் சாயிரி அமிராணி வேண்டுகோள் விடுத்தார்.
செனஹச நிலையத்தின் தேவைகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் விசேட கவனம்
செனஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மத்திய நிலையத்தின் பிரதிநிதிகள் குழு இன்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களை சந்தித்தனர்.
ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கக் கூடிய நாட்டை உருவாக்கவே அரசு விரும்புகிறது - பாதுகாப்பு செயலாளர்
ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கக் கூடிய நாடொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்க வேண்டிய தேவை அரசுக்குள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் துருக்கிய தூதுவருக்கு பாதுகாப்பு செயலாளர் பிரியாவிடை
தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்துஹதார் இன்று (டிசம்பர் - 30) பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களைச் சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டார்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஒய்வு) ஆனந்த பீரிஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை மரியதை நிமிர்த்தம் இன்று (டிசம்பர். 24) சந்தித்தார்.
தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதற்கே அரசு முன்னுரிமை அளிக்கிறது- பிரதமர் ராஜபக்ஷ
முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக தேசிய பாதுகாப்பை மீள ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.