--> -->

ஜா-எல பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுடன் நேரடித் தொடர்பைப் பேணிய 52 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஏப்ரல் 12, 2020

ஜா-எல, சுதுவெல்ல பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுடன் நேரடித் தொடர்பைப் பேணிய நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படாமல் நடமாடித் திரிவதாக இலங்கை கடற்படையினருக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைக் பெற்றுள்ளன.

இதற்கமைய அவர்கள் இலங்கை கடற்படையினரால் நிருவகிக்கப்படும் ஒலுவில் தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 28 பேர்களில் ஆறு பேருக்கு ஏற்கனவே கரோனா வைரஸ் தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடி தொடர்புகளைப் பேணியவர்களை கண்டறியும் செயற்திட்டம் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவர்கள், ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 43 பேரையும் மகேவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 9 பேரையும் அடையாளம் கண்டனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர்களே தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 52 பேர்களில் 42ஆண்களும் 10 பெண்களும் 3 சிறுவர் சிறுமிகளும் உள்ளடங்குகின்றனர்.

அவர்கள் ஒலுவில் தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட முன்னர் முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.