--> -->

சொய்சாபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தபடட் ட டீ 56 ரக துப்பாக்கி மீட்பு

ஜூன் 12, 2020

மேல்மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினரால் சொய்சாபுரம் கல்கிஸ்ஸை துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் மலபே பகுதியில் வைத்து நேற்று (ஜூன், 11) கைது செய்துள்ளனர்.  

கலேவெல பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய குறித்த சந்தேகநபர் உட்பட அவரிடம் இருந்த   டீ 56 ரக ஆயுதம், இரண்டு  மெகசின் ரக துப்பாக்கி மற்றும் 35 வெடிமருந்துகள் ஆகியவற்றை கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் நேற்று சமர்பிக்கப்பட்டன.

கடந்த மாதம் (மே 29) சொய்சாபுர கல்கிஸ்ஸை ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டமையினாலே குறித்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிகவிசாரனைகள் கல்கிஸ்ஸை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.