--> -->

தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது

ஜூன் 20, 2020

ராகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட, கொலை மிரட்டல் மற்றும் பல கொள்ளைச் சம்பவங்ககளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் வெளிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றவாளியை 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்குமாறு வெளிசர நீதிமன்ற நீதியரசரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல நாட்களாக தேடப்பட்டு வந்த இந்த குற்றவாளியை கைக்குண்டு, கேரள கஞ்சா மற்றும் கார் சகிதம் ராகம, ஹொறப்பே பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

கம்பஹா மற்றும் வெளிசர நீதிமன்றங்களினால் குறித்த சந்தேக நபருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் ராகம பொலிசாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.