--> -->

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது

ஜூன் 22, 2020

பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த 'இந்திர' என அறியப்படும் இந்துனில் குமாரவின் நெருங்கிய சகாக்கள் என நம்பப்படும் மூன்று சந்தேக நபர்களைபொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.   

ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.   

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் 'அக்கு' என அழைக்கப்படும் தனிப்புலி ஆராச்சிகே தசுன் ஜயதிலக்க என அடையாளங்காணப்பட்டுள்ளார்.  

சந்தேகநபர்கள், போலி கைத்துப்பாக்கி ஒன்று, மூன்று வாள்கள், ஒரு கூர்மையான கத்தி மற்றும் 375 கிராம் கஞ்சா ஆகியவற்றை தங்கள் வசம் வைத்திருந்தனர்.  

குறித்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஹங்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.