--> -->

கைக்குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் உடல் கவசங்களுடன் பெண் ஒருவர் கைது

ஜூலை 01, 2020

ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் இன்று (ஜூலை 01)  மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிமருந்துகளுடன் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தேடுதல் நடவடிக்கையின் போது ஏழு கைக்குண்டுகள், ஒரு ரிப்பீட்டர் ரக குறுந்தூர துப்பாக்கி , நான்கு துப்பாக்கி ரவைகள், இரண்டு பாதுகாப்பு உடல் கவசங்கள் மற்றும் அடையாளம் காணப்படாத நான்கு துப்பாக்கி ரவைகள் ஆகியன மீட்கப்பட்டன. ஹோமாகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கு அமைய விசேட அதிரடிப்படையினரால் ஜூன் மாதம் 29ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது12 சிறிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ஜூன் 29ம் திகதி, விசேட அதிரடிப்படையினரால் களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 ரி -56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு ரி -81 ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான கட்டடத்தின் உரிமையாளரும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் முன்னர் கைது செய்யப்பட்ட கட்டிட உரிமையாளருடன் தொடர்புகளைப் பேணியதாக நம்பப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.