--> -->

நாட்டில் தற்பொழுது அமைதி நிலை

மே 18, 2019

நாட்டில் தற்பொழுது அமைதி நிலவுவதாகவும், நிலவும் அமைதியை சீர் குலைக்கும் வகையில் எந்தவிதத்திலாவது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட முற்படும் நபர்கள் தொடர்பாக பாதுகாப்பு படையினர் மிகவும் கூர்மையான அவதானத்துடன் இருப்பதாகவும், போலி தகவல்கள் பரப்புவதை தவிர்ப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விஷேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவானது சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான தகவல்கள் பரவுவதை தடுப்பதற்காக முழு முயற்சியுடன் செயற்படுவார்கள். சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறு போலியான தகவல்களை பரப்பும் நபர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கொள்ளுப்பிட்டி பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று (மே, 17) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (மே 16) ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவில் கைதுசெய்யப்பட்டு, ஹொரவபொத்தான பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, அவசரகால சட்டத்தின் கீழ் நபார் ஒருவர் கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவரது கைது தொடர்பில் சந்தேக நபரின் நெருக்கமான உறவினர்களிடம் எழுத்துமூல சிட்டு வழங்கப்பட வேண்டும். சந்தேக நபர் பொலிஸாரினால் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்படும் பட்சத்தில் அந்த எழுத்துமூல சீட்டை உரிய பொலிஸ் நிலையத்தில் கையளிக்க வேண்டும் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.