--> -->

சந்தஹிரு சேயாவில் இடம்பெற்ற பக்தி கீதையின் போது நாட்டின் இராணுவ வீரர்களுக்கு அதியுயர் அஞ்சலி செலுத்தப்பட்டது

ஜூன் 04, 2023

தேசத்தின் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக விசேட 'பொசோன் பக்தி பாடல்' நிகழ்வு நேற்று (ஜூன் 03) மாலை சந்தஹிரு சேயா வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பொசன் பௌர்ணமி தினம் இலங்கை பௌத்த மக்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும், இது புத்த பெருமானின் செய்தியுடன் அரஹத் மகிந்த தேரர் எமது தாய்நாட்டிற்கு வருகை தந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வருகையை குறிக்கிறது.

'பக்தி கீதா' (புது குண கீ) என்பது புத்தபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல்கள், குறிப்பாக பௌத்தர்களால் மத நிகழ்வுகளின் போது பாடப்படுகிறது. இந்த பாடல்கள் மத நிகழ்வுகளை கொண்டாடுவதற்காகவும், ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகவும் புத்தரைப் பற்றிய பக்தி பாடல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த நிகழ்வின் போது, மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பிரமுகர்கள் சந்தஹிரு ஸ்தூபி வளாகத்திற்கு வந்து சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

இந்த புனித பொசன் போயா தினத்தில் தாய்நாட்டை கருணையுடன் ஆசீர்வதிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் போது இராணுவ வீரர்கள் விளக்குகளை ஏற்றி 'பொசோன் பக்தி பாடல்களை' பாடினர்.

இந்த நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சித்ராணி குணரத்ன, 21வது பிரிவின் பொது கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, மின் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சித் ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர, பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள், முப்படையினர், இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள், பக்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.