--> -->

பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்

ஒக்டோபர் 16, 2023

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உட்பட ஐந்து இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (ஒக்.16) முதல் அமுலுக்கு வரும் வகையில் பதில் அமைச்சர்களாக நியமித்துள்ளார்.

சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (15) இரவு சீனாவுக்கு புறப்பட்டார்.

இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.