--> -->

இலங்கை இராணுவத்தினரால் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு
இரத்ததானம் வழங்கிவைப்பு

ஒக்டோபர் 19, 2023

இலங்கை இராணுவத்தின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் இலங்கை இராணுவத்தினர் (ஒக்.15) இரத்ததானம் வழங்கும் நிகழ்வினை மேற்கொண்டனர்.

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு தேவையான இரத்தத்தை தானம் செய்ய 64வது காலாட் படைப்பிரிவில் சேவையாற்றும் 90 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தாமாக முன்வந்து இரத்ததானம் வழங்கியதாக இலங்கை இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

641, 642, மற்றும் 643 வது காலாட் பிரிகேட் மற்றும் 8வது இலங்கை பீரங்கி படையணி, 23வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 5வது (தொ) இலங்கை சிங்க படையணி ஆகியவற்றின் இராணுவ வீரர்கள் இத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.எஸ்.தேவப்பிரிய அவர்களின் பணிப்புரைக்கமைய முல்லைத்தீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த இரத்ததான நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.