--> -->

நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய சிந்தனையாளர் செயலமர்வில் கேர்ணல் நளின் ஹேரத்தினால் விஷேட சொற்பொழிவு

நவம்பர் 13, 2023

Konrad Adenauer Stiftung மற்றும் South Asian Think Tanks (COSATT) இணைந்து நவம்பர் 7ஆம் திகதி காத்மாண்டுவில் ஏற்பாடு செய்த மாநாட்டில், பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளரும், இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகவுமான கேர்ணல் நளின் ஹேரத் அவர்கள் விரிவுரை ஆற்றினார்.

COSATT என்பது தெற்காசியாவில் உள்ள முன்னணி சிந்தனைக் குழுக்களின் ஒரு குழுவாகும். இது பிராந்தியம் தொடர்பான குறிப்பிடத்தக்க தலைப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்கிறது. பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பிராந்தியத்தில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதற்கு சிந்தனைக் குழுக்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை ஒன்றிணைக்கவும் COSATT செயல்பட்டு வருகிறது.

கேர்ணல் ஹேரத் பிரமுகர்கள் மத்தியில் உரையாற்றுகையில் “தொற்றுநோய்க்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு - நெருக்கடியில் உள்ள உலகம்” என்ற தலைப்பில் உரையாற்றிய கேணல் ஹேரத் அவர்கள், போர், வேலையின்மை, விநியோகச் சீர்குலைவு மற்றும் செயற்கை நுண்ணறிவின் அச்சுறுத்தல்கள் போன்ற சவால்களை உலகம் எதிர்கொள்கிறது என்பதுடன், செயற்கை நுண்ணறிவு காரணமாக சுமார் 300 மில்லியன் வேலைகள் இழக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தெற்காசிய நாடுகளில் அதன் தாக்கம் பற்றி எடுத்துரைக்கும் போது, தற்போது நிலவும் உலக சீர்கேடு குறித்த பங்கேற்பாளர்களின் கல்வி அறிவினை விரிவுபடுத்தும், சமகால மதிப்பைக் கொண்ட கருப்பொருளில் அவர் உரையாற்றினார்.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுக்கும் இடையே தற்போது நடைபெரும் போர்களால் உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை கடந்து செல்வதற்கான வழிகள் குறித்து பல்வேறு தெற்காசிய நாடுகளின் வல்லுநர்கள் இதன்போது ஆலோசித்தனர்.

மத்திய கிழக்கு, குவாட், சீனாவின் பிஆர்ஐ, இந்து-பசிபிக், தாய்வான், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் காலநிலை நெருக்கடி ஆகியவை புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
இந்தியாவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தீபங்கர் பேனர்ஜி உட்பட பெண்களின் சிரேஷ்ட பாதுகாப்பாளர் மல்லிகா ஜோசப், இந்தியா பிரச்சினைகளின் முகாமை மற்றும் அமைதிக்கு அடித்தளமிட்ட அவதேஷ் மாத்தூர், சுவிட்சர்லாந்திற்கான நேபாளத்தின் முன்னாள் தூதுவர் ஷம்பு ராம் சிம்காடா, இந்தியாவின் கீதாமாதவன் ஆகிய புகழ்பெற்ற அறிஞர்கள் மாநாட்டின் போது தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

கேர்ணல் ஹேரத் அவர்கள் சர்வதேச உறவுகளில் நிபுணராகவும் மற்றும் திறமையான எழுத்தாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.