திருகோணமலையில் கடற்படையின் EOD & CBRNE நிபுணர்கள் தந்திரோபாய மேம்படுத்தல் பயிட்சியில் ஈடுபட்டனர்
மே 05, 2025வெடிபொருள் அகற்றல் மற்றும் வேதியியல், உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருள் (EOD & CBRNE) குறித்த சிறப்புப் பயிற்சித் நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப் படையைச் சேர்ந்த (SBS) மொத்தம் 24 பேர் மற்றும் அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளை பிரிவை சேர்ந்த (INDOPACOM) மூன்று உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த திட்டம் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கும் EOD மற்றும் CBRNE பதில் நுட்பங்களில் அறிவுப் பகிர்வை ஊக்குவிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டதாக கடற்படை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
01/2025 பாடநெறி ஏப்ரல் 21 முதல் மே 01, 2025 வரை திருகோணமலையில் உள்ள SBS தலைமையகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதன் சான்றிதழ் வழங்கும் விழா கிழக்கு கடற்படை கட்டளை தளபதி தலைமையில் நடைபெற்றது.
ஆபத்தான அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, மதிப்பிடுவதற்கும், நடுநிலையாக்குவதற்கும் தேவையான அத்தியாவசியத் திறன்களை இதன் போது பயிட்சியளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.