இஸ்ரேலிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
மே 20, 2025இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மேதகு ரூவன் சேவியர் அசார், இன்று (மே 20) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இஸ்ரேலிய தூதரை அன்புடன் வரவேற்ற பாதுகாப்பு செயலாளர் பரஸ்பர முக்கியத்துவமிக்க விடயங்கள் உட்பட இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல் குறித்து கலந்துரையாடினர்.
பிராந்திய பாதுகாப்பு இயக்கவியல், திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினர்.