பாதுகாப்பு பிரதி அமைச்சர் RCDS பிரதிநிதிகளுடன்
மூலோபாய கலந்துரையாடலில் ஈடுபட்டார்
மே 21, 2025
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று (மே 21) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில், ஐக்கிய இராச்சியத்தின் (UK) ரோயல் பாதுகாப்பு ஆய்வுகள் கல்லூரியின் (RCDS) பிரதிநிதிகளுடன் நடந்த மூலோபாய கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினார்.
தற்போது இலங்கைக்கு கற்கை விஜயமொன்றை மேட்கொண்டுள்ள RCDS பிரதிநிதிகள் குழு, பயணத்தின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தனர். 20 பேர் கொண்ட குழுவிற்கு பர்மிங்காம் மற்றும் UK கடல்சார் மற்றும் கடலோர காவல்படையின் Lord சைமன் ஸ்டீவன்ஸ், RCDS இன் சிரேஷ்ட பணியாளர் எயார் கொமடோர் போல் ஓ'நீல் (ஓய்வு) ஆகியோர் தலைமை தாங்கினர். இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டேரன் வூட்ஸும் இவ்விஜயத்தில் கலந்துக்கொண்டார்.
RCDS குழுவின் விஜயத்தின் போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர், தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர், கடற்படைத் தளபதி, இலங்கை இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரி மற்றும் இலங்கை விமானப்படையின் விமான நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் கலந்துக்கொள்ளலுடன் நடைபெற்ற கலந்துரையாடல் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கேள்வி-பதில் அமர்வின் போது பயனுள்ள கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், கலந்துரையாடல்களின் முடிவில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.