7வது சர்வதேச பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான கற்கை பாடநெறி
வெற்றிகரமாக நிறைவடைந்தது

மே 22, 2025

7வது சர்வதேச பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான கற்கை பாடநெறி நேற்று (மே 21) ஜெனரல் ஜொன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (KDU) கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிறைவு விழாவுடன் சிறப்பாக நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் மேதகு கலாநிதி சிரி வால்ட் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து ஜெனீவா பாதுகாப்பு கொள்கைகள் மையம் (GCSP) ஏற்பாடு செய்த இந்த ஒரு வார கால பாடநெறி மே 14 அன்று தொடங்கியது. இதற்கு 35 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் இராஜதந்திர பணியாளர்களை ஒன்றிணைத்துடன், அறிவு பரிமாற்றம் மற்றும் மூலோபாய ஒத்துழைப்புக்கான சிறந்த ஒரு தனமாகவும் அமைந்தது.

நிறைவு விழாவின் போது, பங்கேற்பாளர்களுக்கு மேதகு வால்ட் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன. அவருடன் KDU பிரதி துணைவேந்தர் பிரிகேடியர் பிரதீப் ரத்நாயக்க மற்றும், பாடநெறியின் இயக்குநருமான கேர்ணல் (ஜிஎஸ்) கலாநிதி லாரன்ட் கரிட்டும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் வெளிநாட்டு தூதரக பாதுகாப்பு ஆலோசகர்கள், இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பல நிதிகளும் கலந்து கொண்டனர்.