2025 மூலோபாயத் திட்டம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு 
 மதிப்பாய்வு செய்கிறது                        
                        
                          ஜூன் 14, 2025                            
                        
                    2025–2029 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு அமைச்சுக்கான மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக இன்று (ஜூன் 14) உஸ்வெட்டகையாவ மாலிமா மண்டபத்தில் ஒரு சிறப்புப் கருத்தரங்கு நடந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகள் மற்றும் செயல்பாடுகளுக்கான திட்டத்தை வகுப்பது தொடர்பில் இதில் கவனம் செலுத்தப்பட்டது. பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் திட்டமிடல் நிபுணர்கள் தங்கள் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒரு முன்னோக்கிய மற்றும் எதிர்கால மூலோபாய செயல்முறைக்கு அடித்தளம் அமைக்கவும் நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) ஆர்.டி. அனுர ரணசிங்கவின் வரவேற்புரையுடன் ஆரம்பித்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அறிமுக உரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் திறன்களைப் பராமரிக்க நீண்டகால திட்டமிடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மூலோபாய திட்டமிடலின் மூன்று முக்கிய கட்டங்களாக கட்டமைக்கப்பட்ட இந்த கருத்தரங்கை, நீர் வழங்கல் அமைச்சின் முன்னாள் செயலாளரும் சிரேஷ்ட வளவாளருமான மொன்டி ரணதுங்க வழிநடத்தினார். மதிய உணவுக்கு முந்தைய முதல் மற்றும் இரண்டாவது அமர்வுகள் பாதுகாப்பு மூலோபாய கட்டமைப்பின் முக்கிய கூறுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தபட்டதுடன், மூன்றாவது அமர்வு திட்டங்களுக்கான செயல்படுத்தல் வழிமுறைகள் மற்றும் மதிப்பீட்டு அளவுகோல்களில் கவனம் செலுத்தபட்டது.
இக்கருத்தரங்கு பங்கேற்பாளர்களுக்கு கருத்துக்களை முன்வைக்கவும் முன்மொழியப்பட்ட உத்திகளை மேலும் விளக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. முக்கியமாக இக்கருத்தரங்கு முன்வரும் வருடங்களில் இலங்கையின் பாதுகாப்புத் துறையின் தயார்நிலை மற்றும் மீள்தன்மையை உறுதிசெய்து, வளர்ந்து வரும் தேசிய மற்றும் உலகளாவிய சவால்களுடன் பாதுகாப்புத் திட்டமிடலை சீரமைப்பதில் ஒரு முக்கிய படியைக் குறித்தது என்பது குறிப்பிடத்தக்கது.