இராணுவ பிரதம அதிகாரி பிரியாவிடை நிமித்தம் பாதுகாப்பு
செயலாளரை சந்தித்தார்
ஜூன் 20, 2025
ஓய்வுபெறும் இலங்கை இராணுவ பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜூன் 20) பாதுகாப்பு அமைச்சில் பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.
இதன் போது, மேஜர் ஜெனரல் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்புமிக்க சேவைக்கு பாதுகாப்புச் செயலாளர் பாராட்டுகளைத் தெரிவித்தார். ஆயுதப் படைகளின் தொழில்முறை மேம்பாட்டிற்கு அவரது பதவிக்காலத்தில் மேட்கொள்ளப்பட்ட முக்கிய சேவைகள் மற்றும் முயற்சிகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
ஓய்வு பெரும் மேஜர் ஜெனரல் விக்கிரமசிங்கவின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிழும் நல்லாரோக்கியத்திற்காகவும் பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.