ஒரு பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா தின நிகழ்ச்சி
ஜூன் 21, 202511வது சர்வதேச யோகா தினம் (IDY) இன்று (ஜூன் 21) கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது, இதில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது.
2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஜூன் 21 உலகளவில் சர்வதேச யோகா தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நிகழ்வு "ஒரு பூமி, ஒரு ஆரோக்கியத்திற்கான யோகா" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது, இது தனிநபர் நல்வாழ்விற்கும் நமது உலகின் ஆரோக்கியத்திற்கும் இடையிலான ஆழமான தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்நிகழ்வு வணக்கத்திற்குரிய கலாநிதி விமலசார மகா தேரர் மற்றும் மஹா சங்கத்தினருடைய பிரார்த்தனைகள் ஆரம்பமானது. இலங்கையில் பத்து ஆண்டுகால IDY - ஐ நிகழ்வுகளை நினைவுகூரும் வீடியோ விளக்கக்காட்சியும் இதன் போது காட்சிப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் போது பல வகையான யோகா வழிமுறைகள் உள்ளிட்ட வழிகாட்டல் முறைகள் பங்குபற்றியவர்களின் ஒற்றுமை, சமநிலை மற்றும் சுயபரிசோதனைக்கான ஒரு தருணத்தை வழங்கியது. இந்த அமர்வு யோகாவின் உலகளாவிய ஈர்ப்பை அழகாக எடுத்துக்காட்டியது.
இந்திய உயர் ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா, இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஜயசேகரவுடன் (ஓய்வு) இணைந்து, பாராட்டு விழாவில் பங்கேற்று, யோகா நிறுவனங்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வு நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.