விமானப்படை மருத்துவமனை கட்டுமான திட்டம் குறித்த
முன்னேற்ற ஆய்வு கூட்டம்

ஜூலை 08, 2025

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் இன்று (ஜூலை 8) பாதுகாப்பு அமைச்சில் ஒரு முன்னேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாரஹேன்பிட்டவில் இலங்கை விமானப்படை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இம்மருத்துவமனை விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

இக்கூட்டத்தில் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் மற்றும் பல அரச இஸ்தாபனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் நகர அபிவிருத்தி அதிகார சபை, நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சு, விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, விவசாயத் துறை மற்றும் தேசிய உணவு மேம்பாட்டு சபை ஆகிய இஸ்தாபங்களின் அதிகாரிகளும் அடங்குவர்.

மருத்துவமனை வளாகத்தை சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்வதற்கான உள்கட்டமைப்பு முன்னேற்றம், நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் உத்திகள் குறித்து விவாக கலந்துரையாடப்பட்டது. விமானப்படையில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சேவை செய்யும் ஒரு அதிநவீன வசதியை வழங்குவதற்கான கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை பாதுகாப்பு செயலாளர் இதன்போது வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.