மறைந்த மற்றும் போர்வீரர்கள் குடும்பங்களின் நலன்புரி நடவடிக்கைகள்
குறித்து பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும் முன்னெடுக்க உறுதி

ஜூலை 09, 2025

இன்று (ஜூலை 09) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற பொது தின நிகழ்ச்சியில், போர் வீரர்கள் மற்றும் மறைந்த போர்வீரர் குடும்பங்களின் நலன்புரி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க அதன் அர்ப்பணிப்பை பாதுகாப்பு அமைச்சு மீண்டும் வலியுறுத்தியது. பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தேசத்திற்காக்க இவர்கள் மேட்கொண்ட தன்னலமற்ற சேவைக்காக ஆதரவளிப்பதில் அமைச்சின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. 

இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற வீரர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் நிவர்த்தி செய்வதிலும், கடமையின் போது உச்ச தியாகத்தை செய்தவர்களின் குடும்பங்களின் தேவைகளையும் பிரச்சினைகளி நிவர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டது. பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பாளர்களுடன் தனிப்பட்ட முறையில் கதைத்து அவர்களின் தேவைகளை பொறுமையாகக் கேட்டறிந்துக் கொண்டார். மேலும் அவற்றிற்கு உடனடி தீர்வை உறுதி செய்ய அமைச்சக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். போர் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நலத்திட்டங்களை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதன் மூலம் போர் வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கௌரவிப்பதற்கும் பராமரிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சு அதன் உறுதிப்பாட்டடி மீண்டும் வெளிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.