யுத்த வீரர்களை கௌரவித்தல்: பொது தினத்தில் முன்முயட்சி

ஜூலை 15, 2025

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இன்று (ஜூலை 15) அவரின் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொது தின நிகழ்ச்சியில், யுத்த வீரர்கள் மற்றும் மறைந்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

தேசத்தித்க்காக உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்கள், ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற வீரர்களில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்காக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர், பங்கேற்பாளர்களுடன் நேரடியாகப் கதைத்து அவர்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டருந்தார். அவர்கள் எதிநோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவாகச் செயல்படுமாறு அவர் அமைச்சக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சின் பரந்த பார்வையை வலியுறுத்தி, மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) யுத்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நலத்திட்டங்களை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தேசத்தின் பாதுகாப்பிற்காக இவர்களின் பங்களிப்புகள் மற்றும் தியாகங்களை அரசாங்கம் அங்கீகரிப்பதாகவும் அவர்களின் கண்ணியத்தையும் நல்வாழ்வையும் நிலைநிறுத்த தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

முன்னாள் யுத்த ராணுவ வீரர்களின், மறைந்த வீரர்களின் குடும்பங்கலின் நலன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சசின் உறுதி மற்றும் அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.