மாலைத்தீவின் 60வது தேசிய தின விழா நேற்று (ஜூலை 22) கொழும்பு Cinnamon Life - City of Dreams Hotelல் நடைபெற்றது
ஜூலை 23, 2025நேற்று மாலை நடைபெற்ற இவ் விழாவில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) கலந்து கொண்டார். இலங்கைக்கான மாலத்தீவு தூதுவர் அதிமேதகு மசூத் இமாத், விழாவிற்கு வருகைதந்த பிரமுகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் விருந்தினர்களை வரவேற்றார்.
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கைக்கான மாலத்தீவு உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதாக அமைந்தது.
இந்த நிகழ்வு மாலத்தீவு தேசிய தினத்தை நினைவுகூர்ந்தது மட்டுமல்லாமல், இலங்கைக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான ஆழமான வேரூன்றிய இராஜதந்திர உறவுகள் மற்றும் பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
சிரேஷ்ட அரச அதிகாரிகள், இராஜதந்திரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.