மறைந்த அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி அனுநாயக்க தேரருக்கு பாதுகாப்பு செயலாளர் இறுதி அஞ்சலி செலுத்தினார்

ஜூலை 25, 2025

அஸ்கிரி பீடத்தின் சியாம் பிரிவின்  அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரரின் இறுதிச் சடங்குகள் நேற்று (ஜூலை 24) கண்டியில் உள்ள அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் அரச அனுசரணையுடன் நடைபெற்றன.

மறைந்த அனுநாயக்க தேரரினால் சாசனத்திற்கும் தேசத்திற்கும் அளிக்கப்பட்ட வாழ்நாள் சேவைக்கு அளிக்கப்பட்ட ஆழ்ந்த மரியாதை மற்றும் தேசிய அங்கீகாரத்தையம் குறித்து பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா  (ஓய்வு) அவரின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்றார்.  

அதன் பின் பாதுகாப்பு செயலாளர்  அஸ்கிரி பீடத்தின் சியாம் பிரிவின்  பிரதம பீடாதிபதியான அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரரை மரியாதை நிமித்தம்  சந்தித்தார். இந்த சந்தர்ப்பங்களில் முப்படைத் தளபதிகளும் பாதுகாப்பு செயலாளருடன் இணைந்தனர்.