ஓய்வுபெற்ற, காயமடைந்த மற்றும் மறைந்த படைவீரர் குடும்பங்களின் நலன் தொடர்பில் பொது நாளின் போது கவனம் செலுத்தப்பட்டது
ஜூலை 30, 2025ஓய்வுபெற்ற, காயமடைந்த மற்றும் மறைந்த படைவீரர்களின் குடும்பத்தினரின் கவலைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட பொது நாள் நிகழ்ச்சியின் மூன்றாவது அமர்வு இன்று (ஜூலை 30) கொழும்பில் உள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அலுவலகத்தில் நடைபெற்றது.
படைவீரர்களின் குடும்பங்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறிந்து அவற்றிட்கு தீர்வுகாண்பதற்கு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பிரதி அமைச்சர் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுடன் நேரடியாக கதைத்து , அவர்களின் தேவைகளையும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், நலன்புரி முயற்சிகளை விரைவுபடுத்துவதிலும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் அமைச்சின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நாட்டைப் பாதுகாப்பதில் முப்படை உறுப்பினர்கள் செய்த விலைமதிப்பற்ற சேவை மற்றும் தியாகங்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் ஆழ்ந்த பாராட்டுகளையும் இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.