மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மூலோபாய செயல் திட்டத்திற்கான பரிந்துரைகளை (2026-2030) பாதுகாப்புச் செயலாளரிடம் IOMனால் கையளிப்பு

ஆகஸ்ட் 06, 2025

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) தலைமைத் தூதர் திருமதி. கிறிஸ்டின் பி. பார்கோ, மனித கடத்தலைக் கண்காணித்து மற்றும் எதிர்த்துப் போராடுவதற்கான 2026-2030 தேசிய மூலோபாய செயல் திட்டத்திற்கான பரிந்துரைகளை ஆகஸ்ட் 05 அன்று தேசிய மனித கடத்தல் எதிர்ப்பு பணிக்குழுவின் தலைவர், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடம் (ஓய்வு) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த சந்தர்ப்பத்திற்கு தேசிய மனித கடத்தல் எதிர்ப்பு பணிக்குழுவின் தூதுக்குழு தலைவர் திருமதி. மினோலி பி. டான், இலங்கை IOM இன் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் மற்றும் தேசிய மனித கடத்தல் எதிர்ப்பு பணிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய முயற்சிகளை வலுப்படுத்துவது குறித்து முக்கியமாக விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இரு தரப்பினரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள், 2026 முதல் 2030 வரையிலான நாட்டின் மூலோபாய முயற்சிகளை வழிநடத்தி வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மனித கடத்தலை தடுப்பதில் தேசிய முன்னுரிமைகள் மற்றும் சர்வதேச தரநிலைகள் இரண்டிற்கும் ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.