மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்யும்
திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவு

ஆகஸ்ட் 15, 2025

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சுத்தம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டம் பிரதம கள பொறியியலாளர் பிரிகேடியர் சீ.டி விக்ரமநாயக்க டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்த சர்வதேச விமான நிலையம் ஒரு முக்கிய தேசிய வளமாக இருப்பதால், நாட்டின் நலனுக்காக இது வளத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த தூய்மையாக்கும் திட்டம், ஒரு குறிப்பிடத்தக்க தேசிய பணியாகக் கருதப்படுகிறது.

2025 ஜூன் 09 ஆம் திகதி தொடங்கி 2025 ஆகஸ்ட் 07 ஆம் திகதி நிறைவடைந்த இத்திட்டம், இலங்கை பொறியியல் படையணிக்கு சொந்தமான வாகனங்களை பயன்படுத்தி, 6 வது களப் பொறியியல் படையணியின் படையினரின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டது.

இந்த முதல் கட்டத்தின் போது, விமானநிலைய வளாகத்தின் 78.8 ஹெக்டேர் நில பரப்பு சுத்தம் செய்யப்பட்டது.

நன்றி - www.army.lk