இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

ஆகஸ்ட் 19, 2025

இந்திய தூதகரத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே இன்று (ஆகஸ்ட் 19) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.

பிரதி உயர் ஸ்தானிகருடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் (DA) கெப்டன் ஆனந்த் முகுந்தன் மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் மந்தீப் சிங் நேகி ஆகியோரும் உடனிருந்தனர்.

இச்சந்திப்பின் போது பரஸ்பர ஆர்வம் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் மிக்க விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடபட்டது.

இந்த சந்திப்பு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.