வியட்நாமின் 80வது சுதந்திர தின நிறைவு விழா, இலங்கை-வியட்நாம் இராஜதந்திர உறவுகளின்55 ஆண்டு நிகழ்வு கொழும்பில் கொண்டாடப்பட்டன
ஆகஸ்ட் 20, 2025வியட்நாம் சோசலிசக் குடியரசின் 80வது சுதந்திர தின விழா, வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 55வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 19) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைபவ ரீதியாகக் கொண்டாடப்பட்டது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாதுறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அவருடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) ஆகியோர் கலந்து கொண்டனர். இது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்வகையில் அமைந்திருந்தது.
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் அதிமேதகு திருமதி டிரின் தி டாம், சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்தும் நட்பு மற்றும் ஒத்துழைப்பின் உணர்வை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
வியட்நாமின் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையில் கலாச்சார நிகழ்ச்சிகளால் மாலை வேளை மெருகூட்டப்பட்டது, இது பாரம்பரியம் மற்றும் நட்பின் நீடித்த பிணைப்புகளை அடையாளப்படுத்துகிறது.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற பிரதி சபாநாயகர், ஆளுநர்கள், மூத்த அதிகாரிகள், இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படை தளபதிகள் மற்றும் இராஜதந்திர சமூக உறுப்பினர்கள் ஒன்றிணைந்தனர், இது வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான பரந்த அளவிலான ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது.
இந்த நிகழ்வு வியட்நாமின் சுதந்திரத்தை நோக்கிய வரலாற்றுப் பயணத்தை மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான 55 ஆண்டுகால இராஜதந்திர கூட்டாண்மை, ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியது.