சீன மக்கள் போர் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது
ஆகஸ்ட் 21, 2025ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்கள் எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போரின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவு நேற்று (ஆகஸ்ட் 20) கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BMICH) கொண்டாடப்பட்டது.
பிரதம அதிதியாக கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கௌரவ (டாக்டர்) உபாலி பன்னிலகேவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா (ஓய்வு) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் அதிமேதகு தங்கிய குய் ஜென்ஹோங் உரையில் :- எட்டு தசாப்தங்களுக்கு முன்னர் பாசிசத்தை எதிர்த்தவர்களின் தியாகங்களைப் பற்றி நினைவு கூர்ந்தார் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு அமைதியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த விழா இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் பங்களிப்பாக அமைந்திருந்தது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.