80வது இந்தோனேசிய சுதந்திர தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கலந்துக் கொண்டனர்
ஆகஸ்ட் 28, 2025நேற்று (ஆகஸ்ட் 27) கொழும்பில் நடைபெற்ற 80வது இந்தோனேசிய சுதந்திர தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கலந்துக் கொண்டனர்.
இலங்கைக்கான இந்தோனேசிய குடியரசின் தூதுவர் H.E. Dewi Gustina Tobing, நிகழ்விற்கு வருகை தந்த பிரமுகர்களை வரவேற்றார். கிராமிய மேம்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கௌரவ (Dr.) உபாலி பன்னிலகே, நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்தோனேசியாவின் 80வது சுதந்திர ஆண்டு நிறைவைக் முன்னிட்டு கொழும்பிலுள்ள இந்தோனேசிய தூதகரத்தினால் கொழும்பு ஹோர்ட்டன் பிளேஸிலுள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது இந்தோனேசிய தூதுவருக்கும் இந்தோனேசிய மக்களுக்கும் பிரதி அமைச்சரும் பாதுகாப்புச் செயலாளரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். இது இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் வலுவான பிணைப்புகளை மீண்டும் உறுதிப்படுத்தியது.
முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், இராஜதந்திரீகல், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நேற்று (ஆகஸ்ட் 27) கொழும்பில் நடைபெற்ற 80வது இந்தோனேசிய சுதந்திர தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கலந்து கொண்டனர்.
இலங்கைக்கான இந்தோனேசிய குடியரசின் தூதுவர் H.E. Dewi Gustina Tobing, நிகழ்விற்கு வருகை தந்த பிரமுகர்களை வரவேற்றார். கிராமிய மேம்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கௌரவ (Dr.) உபாலி பன்னிலகே, நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.