சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கிடையிலான வலுப்படுத்துதல்
செப்டம்பர் 03, 2025சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளரும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (KDU) முகாமைத்துவ சபையின் தலைவருமான எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) ஆகியோர் நேற்று (செப்டம்பர் 2) வேரஹெரயிலுள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (UH-KDU) பல்கலைக்கழக மருத்துவமனைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டனர்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக குமார பிரமுகர்களை வரவேற்றதுடன், இந்த போதனா வைத்தியசலையில் காணப்படும் நவீன வசதிகள் அதன் மூலன் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கம் அளித்தார்.
வைத்தியசாலையின் வளாகத்திற்குள் நேரில் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இந்த வைத்தியசாலையில் உள்ள வளங்கள் மற்றும் உபகரணங்களை மேலும் சிறந்த முறையில் எதிர்காலத்தில் பயன்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
தற்போதைய சுகாதாரத் தேவைகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் எதிர்கால கோரிக்கைகள் இரண்டிற்கும் ஏற்ப மருத்துவமனையின் சேவைகளை சீரமைப்பதன் முக்கியத்துவத்தை இந்த கூட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.
மருத்துவமனையின் செயல்திறனை மேம்படுத்துதல், சிறப்பு பராமரிப்பை விரிவுபடுத்துதல் மற்றும் மருத்துவக் கல்விக்கும் சுகாதாரப் பராமரிப்பு வழங்கலுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துதல் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்த விஜயம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, அடுத்த தலைமுறை மருத்துவ நிபுணர்களை வளர்ப்பதோடு மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்குவதற்கான பகிரப்பட்ட தொலைநோக்கை மீண்டும் உறுதிப்படுத்தியது.