தங்கல்லை நகரசபை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நே ற்று இரவு (செப்டம்பர் 04) எல்ல-வெல்லவாய வீதியின் 23 -24 km மைல்கல்
அருகே பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது

செப்டம்பர் 05, 2025

இதுவரை கிடைத்த தகவல்களின்படி, பேருந்தில் சுமார் 30 பயணிகள் இருந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. மீட்கப்பட்ட மற்றவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப்படை மீட்பு குழுக்கள் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றன. காயப்பட்டவர்களை கொழும்புக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ இலங்கை விமானப்படையின் ஒரு MI ௧௭ மற்றும் ஒரு பெல் 412 ஹெலிகொப்டரும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

பிரதேசவாசிகள், அவசரகால மீட்புக் குழுக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களும் மீட்பு பணிகளுக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டில் ஏற்படும் எந்தவொரு அவசரகால சூழ்நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.