பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு பொப்பி மலர் அணிவிப்பு
செப்டம்பர் 19, 2025பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் (SLESA) தலைவர் மேஜர் ஜெனரல் எல்.எம். முதலிகே (ஓய்வு) இன்று (செப்டம்பர் 19) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களுக்கு பொப்பி மலர் ஒன்றை உத்தியோகபூர்வமாக அணிவித்தார்.
உலக மகா போரில் மரணித்த ஆயுதப்படை வீரர்களை நினைவுகூரும் வகையில் முதலாம் உலகப் போர் முடிவடைந்ததிலிருந்து பொதுநலவாய நாடுகளில் பொப்பி தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
மேஜர் ஜெனரல் முதலிகே தலைமையிலான SLESA தூதுக்குழு இன்று காலை கொழும்பில் உள்ள பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் அவரை சந்தித்த போதே அவருக்கு பொப்பி மலரை அணிவித்தனர்.
இதன் போது பிரதி அமைச்சர் தூதுக்குழுவுடன் சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.