கொழும்பில் நடைபெற்ற கொரிய தேசிய நிறுவன தின விழாவில்
பாதுகாப்பு செயலாளர் கலந்து கொண்டார்
ஒக்டோபர் 02, 2025
கொழும்பில், சினமன் கிராண்ட் ஹோட்டலில் இன்று (அக்டோபர் 2) நடைபெற்ற கொரிய தேசிய நிறுவன தின (Korean National Foundation Day) விழாவில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கலந்து கொண்டார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்ரி போல்றாஜ் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். இலங்கையில் உள்ள கொரிய குடியரசின் தூதரகம் ஆண்டுதோறும் நடத்தும் இந்த நிகழ்வு, கொரிய தேசத்தின் ஸ்தாபனத்தைக் குறிக்கும் வகையில் பாரம்பரியமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வு கொரிய குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகள் மற்றும் வளர்ந்து வரும் ஒத்துழைப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இலங்கைக்கான கொரிய குடியரசின் தூதுவர் அதிமேதகு Miyon Lee, இங்கு உரையாற்றுகையில், இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தனது நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் சபாநாயகர், முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், இராணுவ மற்றும் விமானப்படைத் தளபதிகள், இராஜதந்திரிகள், பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், பிரமுகர்கள், கொரிய மற்றும் இலங்கை சமூகங்களின் உறுப்பினர்கள் மற்றும் வணிகத்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு கலாச்சார பரிமாற்றத்தை வளர்ப்பதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.