உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு ஏட்பாட்டில் தலசீமியா குழந்தைகளுக்கான விசேட சுற்றுலா

ஒக்டோபர் 05, 2025

உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU) இன்று (அக்டோபர் 5) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தலசீமியா பிரிவில் சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கான விசேட சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தது. 

சேவா வனிதா பிரிவின் தலைவி Dr. திருமதி ருவினி ரசிகா பெரேரா தலைமையிலான இந்த நிகழ்ச்சி, அச்சிறுவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அவர்களின் கலாச்சார மற்றும் கல்வி அனுபவங்களை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு மேட்கொள்ளப்பட்டது. 

 இந்த சுற்றுப்பயணத்தின் போது, கண்டி மெழுகு அருங்காட்சியகம், தலதா மாளிகை, ஹந்தான பறவைகள் பூங்கா மற்றும் தேயிலை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிட குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. 

மேலும் இதன் மூலம் இலங்கையின் பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு பற்றிய குழந்தைகளின் அறிவை வளர்க்க மற்றும் மருத்துவமனையின் சூழலுக்கு அப்பால் அவர்களுக்கு சிறந்த மகிச்சியூட்டக்கூடிய அனுபவத்தையும் அடைய இது வழிகோலியது. 

சமூகப் பொறுப்பு மற்றும் சமூக சேவைக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், தேவையுள்ள சிறுவர்களுக்கு மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவு, பராமரிப்பு மற்றும் ஊக்கத்தை வழங்கும் நலத்திட்ட முயற்சிகளில் பாதுகாப்பு அமைச்சின் இப்பிரிவின் ஈடுபாடு தொடரும் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.