KDU பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா விருந்தில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்

ஒக்டோபர் 17, 2025

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) 36வது பட்டமளிப்பு விழா விருந்தில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். இவ் விழா நேற்று மாலை (அக்டோபர் 16) மொரட்டுவையில் உள்ள ரமாடியா கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

பொது பட்டமளிப்பு விழாவிற்குப் பின் நடத்தப்பட்ட இந்த சம்பிரதாய விருந்து, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் முடிவைக் குறித்து நிற்கிறது. நிகழ்வுக்கு வருகைதந்த, பாதுகாப்பு செயலாளரை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார வரவேற்றார்.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு) இச்சந்தர்ப்பத்தில் கலந்துக்கொண்டதுடன், பல்கலைக்கழகத்தின் ரெக்டர்கள், சிரேஷ்ட கல்வி மற்றும் கல்விசாரா அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் உட்பட பட்டதாரிகளும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வு KDU பட்டதாரிகளின் கல்வி சாதனைகளைக் கொண்டாடவும், பல்கலைக்கழகம் தேசத்திற்கு அளித்த தொடர்ச்சியான பங்களிப்பை அங்கீகரிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.